ஓமான் - மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த 54 இலங்கையர்களுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளநடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் இவர்களில் சுமார் 20 பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள பணயம் இல்லை எனக் கூறி தமது எதிர்ப்பினை தெரிவித்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறினார்.
அதன் பின்னர் பயணிகளின் வேண்டுகோளை பரிசீலித்த அதிகாரிகள், அவர்களை விமான நிலையத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி, பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7.40 மணியளவில் ஓமான் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான WY-371 என்ற விமானத்தில் வருகை தந்த 54 இலங்கையர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments