Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சிங்கராஜா வனத்தில் ஹோட்டலா? யோஷித எடுத்துள்ள நடவடிக்கை


பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ சிங்கராஜா வனப்பகுதிக்கு அருகில் ஹோட்டல் வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர, யோஷிதவின் ஹோட்டலுக்கு வசதியாக, சிங்கராஜா முழுவதும் சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையிலேயே யோஷித மறுப்பு வெளியிட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக, தனது சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சில குழுவினர் மீண்டும் ராஜபக்ஷவின் பெயரை கெடுக்க தவறான தகவல்களை பரப்ப முயல்கின்றனர் எனவும் யோஷித குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Post a Comment

0 Comments