Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சஹ்ரான் தொடர்பில் அனுப்பப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புலனாய்வு அறிக்கைகள்!!!


2015 ம் ஆண்டு முதல் சஹ்ரான் ஹாசிம் தொடர்பாக 307 புலனாய்வு அறிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 18 வது நாளாகவும் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

2015 ம் ஆண்டு முதல் சஹ்ரான் காசிம் தொடர்பாக 307 புலனாய்வு அறிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் முன்னாள் பொலிஸ் மா அதிபரை தவிர வேறு எந்தவொரு அதிகாரியும் இதுதொடர்பான மேலதிக அறிக்கைகளை கோரவில்லையென நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மாத்திரம் ஓரிரு தடவைகள் மேலதிக அறிக்கைகளை கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒருசிலர் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்கு சென்ற போதிலும் தாக்குதலை தடுப்பதற்காக தன்னாலான உயர்ந்தபட்ச நடவடிக்கைளை மேற்கொண்டதாகவும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மென்டீஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாணக்க ரணசிங்க சாட்சியளாரிடம் ஏப்ரல் 4 ம் திகதி கிடைத்த புலனாய்வு தகவல்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாததிருந்தன் காரணமாக இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபை மற்றும் முப்படை தளபதிகள் அறிவுறுத்தப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்த்தன இராணு புலனாய்வு பிரிவை அறிவுறுத்தாமைக்கான பொறுப்பை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்தார்.

தான் கடமை ரீதியில் பாதுகாப்பு செயலாளர் பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய புலனாய்வு தலைவர் ஆகியோருக்கே அறிவிக்க வேண்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி கேள்வி எழுப்புகையில் ஏப்ரல் மாதம் 9 ம் திகதி நடைபெற்ற புலனாய்வு மீளாய்வு கூட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து தெளிவுபடுத்துவதற்கும் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது ஏப்ரல் 4 ம் திகதி கிடைத்த தகவல்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு ஏன் உட்படுத்தவில்லையென கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்த்தன அச்சந்தர்ப்பத்தில் உயர் அதிகாரியாக இருந்த தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிசுக்கு ஏப்ரல் 4 ம் திகதி தகவல்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டிருந்ததனால் புலனாய்வு மீளாய்வு கூட்டத்தில் அது மீளாய்வுக்குட்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

அப்போதைய தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் இவ்விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் குறித்த புலனாய்வு மீளாய்வு கூட்டத்தின் போது இதனை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு சந்தர்ப்பம் காணப்பட்டதாகவும் ஜயவர்த்தன மேலும் தெரிவித்தார்.


 

Post a Comment

0 Comments