கொரோனா வைரஸின் தாக்கத்தை அடுத்து ஸ்ரீலங்காவில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாதவாறு உச்சம் கண்டது.
இதனால் தங்கநகை செய்பவர்கள் குறிப்பாக திருமணம் முடிக்க இருந்த பலரும் அதி உச்ச விலையிலேயே அதனை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது ஸ்ரீலங்காவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 22 கரட் தங்கப் பவுணின் விலை 91000 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 24 கரட் தங்கப் பவுணின் விலை 99000 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 08ஆம் திகதிவரை 22 கரட் தங்கப் பவுணின் விலை அதிகபட்சமாக 100500 ரூபா வரையும், 24 கரட் தங்கத்தின் விலை 109500 ரூபா வரையும் சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments