Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

வரலாறு மீளவும் திரும்புகிறதா? சம்பிக்கவுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்


நாடு சர்வாதிகாரப்போக்கிலான வரலாற்றுக்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருப்பதற்கான அறிகுறியா என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார்

இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்பதிவொன்றை இட்டுள்ள அவர்

தற்போது ஆட்சிபீடமேறியிருக்கும் அரசாங்கம், இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டில் அதன் ஆட்சிக்காலத்தின் போது அரசியலமைப்பில் முற்போக்கான திருத்தங்களை ஏற்படுத்துவதாக நாட்டுமக்களுக்கு வாக்குறுதி அளித் தது.

எனினும் சர்வாதிகார முறையொன்றை நோக்கிச்செல்வதற்கு ஏதுவான அரசியலமைப்பின் 18 ‘ஏ’ திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதான அரசியலமைப்பின் 17 ‘ஏ’ திருத்தத்தை நீக்கினார்கள்.

இந்நிலையில் தற்போதும் அதே அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அரசியலமைப்பின் 19’ஏ’ திருத்தத்தை நீக்கி, அதன் பின்னர் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவது பற்றிப் பேசுகின்றார்கள்.

அவ்வாறெனின் வரலாறு மீண்டும் திரும்புகின்றதா? என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்பதிவு செய்துள்ளார் .


 

Post a Comment

0 Comments