Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

நீங்கள் மீண்டு வருவீர்கள்! பிரார்த்திக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச


கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் Maumoon Abdul Gayoom தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மாலைதீவு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இது தொடர்பில் ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைய பிரார்த்திப்பதாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



 

Post a Comment

0 Comments