Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சிறுவன் மீது பாலியல் வன்புணர்வு


17 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேற்கு மாகாணத்தில் நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (என்சிபிஏ) தலைவர் பேராசிரியர் முடிதா விதானபத்திரன தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த சம்பவம் காரணமாக குறித்த சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் இரவில் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கான பயிற்சியில் நடந்ததாக கூறப்படுகிறது.

42 வயதான சந்தேக நபர், சிறுவனை நடனபயிற்சிக்கு பின்னரான இரவு உணவு வாங்கும் போர்வையில் தனது வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

அந்த நபர் சிறுவனுக்கு போதைப்பொருட்களைக் கொண்ட குடிபானத்தை வழங்கினார், பின்னர் சிறுவன் மயக்கத்தில் இருந்தபோது அவனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Post a Comment

0 Comments