Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் விமான நிலையங்களை திறப்பதில் தாமதம் ஏன்? வெளிவந்தது காரணம்


இலங்கையில் சர்வதேச விமான நிலையங்களை மீளவும் திறப்பதற்காக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்காக காத்திருப்பதாக விமான சேவைகள் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான தற்காலிக திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் இலங்கைக்குச் எந்த நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது என்பது தொடர்பான பட்டியலும் இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக 2020 மார்ச் முதல் மூடப்பட்டன.

ஓகஸ்ட் மாதத்தில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது, ஆனால் இந்த நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்த வேண்டியிருந்தது.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் பற்றாக்குறையால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீள அழைப்பதுவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எனினும் அவர்களை மீள அழைக்கும் பணி மீண்டும் தொடங்கியது, ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் செயற்பாடு தொடங்கப்படவில்லை.

சுற்றுலாவுக்கான விமான நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது, ஆனால் ஒரு திகதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

 

Post a Comment

0 Comments