Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் பதவி விவகாரம் அடியோடு நிராகரிப்பு!


ஸ்ரீலங்காவில் துணை பிரதமராக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில் அதனை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிராகரித்துள்ளது.

துணை பிரதமர் பதவி விவகாரம் குறித்து இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் அரசாங்கம் நடத்தவில்லை என்று பொதுஜன முன்னணியின் தவிசாளரும் கல்வியமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு துணை பிரதமர் பதவியை வழங்க கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக அண்மைய நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விடயம் குறித்து கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பொதுஜன முன்னணியின் தவிசாளரும், கல்வியமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதில் வழங்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடரடந்தும் பேசிய அவர்,

துணை பிரதமர் என்கிற ஒரு பதவியை அரசியலமைப்பின் ஊடாக தடையின்றி ஏற்படுத்த முடியும்.

இன்னும் இதுபோன்ற தீர்மானமொன்றை அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சராக தற்போதும் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே வகிக்கின்றார்.

ஸ்ரீலங்கா அரசியலமைப்பின் 03, 04ஆம் பிரிவுகளின் படி பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதியினால் வகிக்க முடியும் என்பதே எமது தர்க்கமாகும்.

அவர் விரும்பினால் அப்பதவியை விட்டுக்கொடுக்க முடியும். அந்த நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தின் முக்கிய அம்சமாகவே பாதுகாப்பு அமைச்சு இடம்பெறுகின்றது. நிறைவேற்று அதிகார முறையிலிருந்து பாதுகாப்பு அமைச்சைப் பறிக்க முடியாது.

இதேவேளை 19ஆவது திருத்தம் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

0 Comments