Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சிறையிலிருந்தே வெற்றீட்டிய பிள்ளையானுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!


விரைவில் விலங்கினை உடைத்து வெளியே வருவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளினால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ளுவதற்காக மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம்.சூசைதாசன், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதியை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரகாந்தன் விரைவில் விலங்கினை உடைத்து வெளியில் வந்து அனைவருடனும் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் சந்திரகாந்தன் கலந்துகொள்வார் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

 

Post a Comment

0 Comments