பெண் ஒருவரிடமிருந்து பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் ஹொரன பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் குறித்த அதிகாரியை கைது செய்தது.
தனது மோட்டார் சைக்கிளை பறிகொடுத்தமை தொடர்பாக தனக்குத் தேவையான ஆவணத்தை வழங்குவதற்காக பெண் குறித்த அதிகாரியை அணுகிய போதே அவர் பாலியல் இலஞ்சம் கோரியிருந்தார்.
மோட்டார் சைக்கிளுக்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதி நிறுவனம் பொலிஸ் அறிக்கையை கோரியிருந்தது.
பாலியல் இலஞ்சம் பெறுவதற்காக அந்தப் பெண்ணைச் சந்திக்க இங்கிரியவில் உள்ள நம்பபனா பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி காத்திருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார்.
0 Comments