பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டிருந்தனர் என்பது விசாரணைகளின் மூலம் உறுதியானால் அவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவுள்ளதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 18 பேர் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலரை சிஐடியினர் விசாரணை செய்துவருகின்றனர்.
சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணையை முன்னெடுக்கும்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் திணைக்களத்தினை சேர்ந்தவர்களாக இருக்கின்ற போதிலும் எந்த மன்னிப்பையும் கருணையையும் வழங்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments