Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அரசாங்கம் உடனடியாக நிராகரித்தால் அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடும்!



இரண்டு முறை கையெழுத்திடப்பட்டுள்ள எம்.சீ.சீ உடன்படிக்கையை உடனடியாக கிழித்தெறிய முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். எம்.சீ.சீ உடன்படிக்கை ஊடாக கடந்த அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டுள்ள நிலைமையில், அந்த உடன்படிக்கையை தற்போதைய அரசாங்கம் உடனடியாக நிராகரித்தால், அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அமெரிக்கா என்பது உலகில் உள்ள பலமிக்க நாடு. அந்த நாட்டிடம் இருந்து 10 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொண்டுள்ளனர். எம்.சீ.சீ. உடன்படிக்கையில் இரண்டு முறைய கையெழுத்திட்டுள்ளனர். இரண்டு முறை கையெழுத்திட்டு, 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது 180 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில், அந்த உடனபடிக்கையை உடனடியாக கிழித்து வீச முடியாது.

உலகத்துடன் பணியாற்றும் முறையொன்று உள்ளது. அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லக் கூடும். நிபுணர்கள் குழுவை அமைத்து உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாமைக்கான காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும். இதற்காகவே ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார். இந்த உடன்படிக்கையை கிழித்து வீசி இருக்க முடியும். அப்படி செய்த பின்னர் சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்று மில்லியன் கணக்கான டொலர்களை இழப்பீடாக செலுத்த எமக்கு சொத்துக்கள் இல்லை.

தற்போதைய சூழ்நிலையில், பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 10 மில்லியன் டொலருக்களுக்கு என்ன நடந்தது, அதற்கான கணக்கு அறிக்கைகள் கூட இல்லை எனவும் டி.வி.சானக்க குறிப்பிட்டுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால், நாடு இரண்டாக பிளவுப்படும் எனவும் அனுராதபுரத்திற்கு செல்லவும் அமெரிக்காவிடம் விசா பெற நேரிடும் எனவும் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியினர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரம் செய்து வந்தனர்.

எம்.சீ.சீ உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் நாடு இரண்டாக பிளவுப்படும் எனவும் தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த உடன்படிக்கையை கிழித்து வீசப் போவதாகவும் அந்த கட்சியினர் கூறினர். எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக பொதுஜன பெரமுனவினர் கடந்த அரசாங்கத்தை குற்றம் சுமத்திய நிலையில், எம்.சீ.சீ உடன்படிக்கைக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளவதற்கான விண்ணப்பத்தை 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே செய்திருந்ததாக அமெரிக்க தூதரகம் அண்மையில் தெரிவித்திருந்தது. அத்துடன் உடன்படிக்கை சம்பந்தமாக எவ்விதமான நிதியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் தூதரகம் குறிப்பிட்டிருந்தது.

Post a Comment

0 Comments