Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அரசியல் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது எனக்கு மட்டுமே தெரியும் - மைத்திரி வீராப்பு



வரலாற்றில் பதியக் கூடிய சாதனையை நிலைநாட்டி பொலன்நறுவை மாவட்டத்தில் வெற்றி பெற போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவை திம்புலாகலை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

என்னை விமர்சிக்கும் நபர் பொலன்நறுவைக்கு கூடுதல் சேவைகளை செய்யவில்லை, மைத்திரிபால சிறிசேனவே செய்தார் என்ற விடயம் மக்களின் மனங்களில் உள்ளது.

ஓய்வு நாற்காலியில் அமர்ந்து மைத்திரிபால சிறிசேன பொலன்நறுவை மாவட்டத்திற்கு என்ன செய்தார் என்பதை சிந்தித்து பார்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

பொலன்நறுவையில் அரசியல் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்று அறிந்தவர் என்னை விட எவரும் இருக்க மாட்டார்கள். நான் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி இருந்தாலும் என்னுடன் போட்டியிட அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. பொலன்நறுவை மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அவர்களுக்கு பதிலளிக்க எதுவுமில்லை.

பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க மஹாவெவ குளத்தை புனரமைத்து வறட்சியை போக்கிய பின்னர், பொலன்நறுவை மக்களின் வயல்களுக்கு பாசன நீர், வீதிகள், வைத்தியசாலை, கல்வி அலுவலகம், தொழில் வாய்ப்பு மற்றும் காணிகளை வழங்கியது என்னை விமர்சிக்கும் நபர் அல்ல, இந்த மைத்திரிபால சிறிசேன என்பது பொலன்நறுவை மக்களின் மனங்களில் இருக்கின்றது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments