2020 ஆம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது.
இந்த வருடம் ஜனவரி 10 ஆம் திகதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் ஆம் திகதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன. ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது.
நாளை நிகழப்போகும் கிரகணம் புறநிழல் சந்திர கிரகணமாகும். இந்த கிரகணத்தின் போது சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருக்காது.
இந்த சந்திர கிரகணம் ஞாயிறு காலை 8.37 க்கு தொடங்கி 11.22 மணிக்கு முடிவடையும். அதிக நிலவு மறைப்பு நிகழ்வது 9.59 மணிக்கு நடக்கும். கிட்டதட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு இந்த கிரகணம் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய, ஸ்ரீலங்கா நேரப்படி காலை நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்வுள்ளதால் இந்தியாவில் காண முடியாது. ஆனால் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் காணலாம்.
குறிப்பிட்ட சில நாடுகளில் சந்திரன், பௌர்ணமி நிலவு போலவே காட்சி அளிக்கும். நிலவின் வண்ணத்தில் ஏற்படும் மாற்றத்தை மக்களால் காண முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments