Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் இனி பாடசாலை வகுப்பறைகள் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படம்




ஸ்ரீலங்காவில் அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை (06) திறக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில் தரம் 05, 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

நாளைய தினம் அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கற்பித்தலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 5 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன்,

தரம் 13 மாணவர்களுக்காக காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் இருக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் வகுப்றையின் மேசை கதிரை உள்ள விதமே வெளியாகி உள்ளது.

முன்புபோல் இல்லாமல் ஒவ்வொரு மாணவர்களும் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments