Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தொடரும் அவலம்! நூறுக்கும் மேற்பட்டோரை பலியெடுத்த நிலச்சரிவு




மியான்மாரின் வடபகுதியில், மரகதக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 113 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கச்சின் மாநிலத்தின் ஹெபகாந்தேரியா நகரத்தில் உள்ள சுரங்கத்தில் மரகதக்கற்களை சேகரித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டு சேற்று அலைக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக அந்நாட்டு நேரப்படி காலை 9:40 மணிக்கு முப்பத்தைந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், பின்னர் மேலும் 15 சடலங்கள் காலை 10:00 மணிக்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்ற அஞ்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆங் சான் சூகி அரசாங்கம் 2016ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த போது, தொழிலைத் தூய்மைப்படுத்துவதாக உறுதியளித்தது. ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டதாகவும் ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments