Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வெற்றியுடன் மீண்டும் தேர்தலுக்குத் தயாராகும் ஜெசிந்தா!



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நியூசிலாந்தின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கான மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் அதிக தொழில் வாய்ப்புகளுக்கான உறுதிமொழிகளுடன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்.

நியூசிலாந்தின் பொதுத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அவர் தனது பிரசார நடவடிக்கைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளார்.

உலகெங்கும் பரவி பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நியூசிலாந்தில் மிகத் துரிதமாக தடுத்து நிறுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து இந்த நூற்றாண்டின் பிரபலமான பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் கருதப்படுகிறார்.

இந்நிலையில், குறித்த விடயமானது எதிர்வரும் தேர்தலில் அவருக்கு சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது தேர்தல் பரப்புரையின் போது கருத்து தெரிவித்த ஜெசிந்தா ஆர்டன், “எந்த விதமான கொரோனா தொற்றாளர்களும் பதிவில் இல்லை. குணப்படுத்துவதற்கான எவரும் பதிவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், நியூசிலாந்தின் சிறிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையானது இம்மாத இறுதிக்குள் மீள செலுத்தப்பட்டால் மேலதிக வட்டி செலுத்தத் தேவையில்லை எனும் நிலையில், குறித்த கால எல்லை இவ்வருட இறுதிவரை நீட்டிக்கப்படும் என அவர் மேலும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அத்துடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில், சூழல் மற்றும் கட்டமைப்பு சார்ந்த பல தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments