Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மைத்திரிக்கும் ரணிலுக்கும் எழுந்துள்ள புதிய சிக்கல்!



உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமைக்கான பொறுப்பை மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும் ஏற்கவேண்டுமென இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உறவு பாதிக்கப்பட்டிருந்ததே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

புலனாய்வு ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் பலமுறை ஆராயப்பட்ட ஒரு விடயம் குறித்து அப்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியவில்லை என்பது இருவரும் தேசிய பாதுகாப்பு குறித்து சிறிய ஆர்வத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை புலப்படுத்தியுள்ளது.

52 நாட்கள் வேறு அரசாங்கம் காணப்பட்ட பின்னர் இருவருக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்தன.

பிரதமர் நாட்டில் இல்லாத வேளைகளில் தேசிய பாதுகாப்பு பேரவையின் சந்திப்பு இடம்பெற்றமை இதனை புலப்படுத்தியுள்ளது.

மைத்திரிபாலசிறிசேன ரணில்விக்ரமசிங்க, பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் ஊடாக அறிவித்தார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் அவ்வேளை பாதுகாப்பு செயலாளர்களாக பதவி வகித்தவர்களிடம் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து எச்சரிக்க முயன்றபோதிலும் அவர்கள் அது குறித்து அக்கறை காட்டவில்லை

தேசிய புலனாய்வு பணியகத்தை சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளரை வாரத்திற்கு ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என அதன் மூலம் விடயங்களை பாதுகாப்பு செயலாளருக்கு தெரிவிக்கலாம்.

அவர் எங்கள் ஆலோசனையை செவிமடுத்து பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தவர்களை சந்திக்க முயன்றார் ஆனால் அவர்கள் அவரை சந்திக்கவில்லை ஒருவேளை வேலைப்பளு காரணமாகயிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments