மட்டக்களப்பு – உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளில் இருந்து வேளாணன்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு வயல் பிரதேசங்களை நோக்கிவந்த யானைகளை துரத்த முற்பட்டபோது இடம்பெற்றுள்ளது.
இதன்போது கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முனிச்சாமி தங்கையா மற்றும் 7 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
0 Comments