Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

முடி உதிர்வதை போக்கும் பொன்னாங்கண்ணி தைலம்



இன்று பலரும் முடி உதிரும் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர், இதற்கு தீர்வாகிறது பொன்னாங்கண்ணி கீரை. இதை வைத்து தைலம் எப்படி தயாரிக்கிறது என பார்ப்போம்.


தேவையானவை பொன்னாங்கண்ணிக் கீரை – அரை கிலோ (இரண்டு கட்டு வரலாம்) நல்லெண்ணெய் – கால் கிலோ தேங்காய் நெய் – கால் கிலோ விளக்கெண்ணெய் – 150 கிராம்

செய்முறை: முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, உரலில் சுத்தமாக இடித்து ஒட்டச் சாறு பிழிந்து கொள்ள வேண்டும்.சாறு ஒரு டம்ளர் வரை தாராளமாக வரும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. பிறகு சாற்றை ஒரு தட்டிலிட்டு வெயிலில் உருட்ட வரும் பதம்வரை காய வைத்து, மெல்லிய வடைபோல தட்டிக்கொள்ள வேண்டும்.


தட்டவராது போனால் கெட்டிக் குழம்பாய் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று எண்ணெய்களையும் ஒன்று சேர்த்து, இக்கீரை வடையை அல்லது குழம்பைச் சேர்த்து நிதானமாக தணலில் காய்ச்சவும் (தாமிர பாத்திரம் மிக நல்லது அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரம் நல்லது).

அந்த எண்ணெய் பொங்கும், இறக்கி விடவும். நுரை அடங்கி கீரைச்சாறு கசண்டாக அடியில் படியத்தொடங்கியவுடன், எண்ணெய் தெளியத் தொடங்கிவிடும். எண்ணெய் தெளிந்து ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி போத்தலில் நிரப்பி காலையில் சூரியன் உதிக்க முன்னரும், மாலையில் சூரியன் அஸ்தமித்த பின்னரும் உபயோகிக்க வேண்டும்.


வியர்வையில் இதனை உபயோகிக்க கூடாது.




Post a Comment

0 Comments