Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கருணாவுக்கு மன்னிப்பளித்துவிட்டோம் - மகிந்த தெரிவிப்பு



கருணாவுக்கு பிரத்தியேகமாக மன்னிப்பளிக்காவிட்டாலும் முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு அவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால் அந்த பொதுமன்னிப்பின் கீழ் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது எனத் தெரிவித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

இன்றையதினம் அலரி மாளிகையில் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

கருணாவுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டது. எனினும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.


இதன்போது அரசியல் கைதிகளை இந்தப் பொதுமன்னிப்பின் கீழ் ஏன் விடுவிக்க முடியாது எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலருக்கு பாரதூரமான குற்றச்சாட்டுக்களின் கீழ் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அவர்களின் விவகாரம் சிக்கலானது என இதன்போது பிரதமர் மகிந்த தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அரசியல் கைதிகளின் பட்டியல் கையளிக்கப்பட்டமை குறித்து எழுப்பப்பட்டகேள்விக்கு அரசியல் கைதிகளை விடுவிக்கும் எந்த நடவடிக்கையும் தேர்தல் காலத்தில் இடம்பெறவில்லை எனத் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments