Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் இன்றுமுதல் வழங்கப்பட்டுள்ள அனுமதி



ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் கூட்டம் கூடுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளன, கடைகள், பாடசாலைகள் என அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண வீடுகளுக்கு குறைந்தது 50 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு திருமண நிகழ்வுகளில் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேருக்கு குறைந்தளவான மக்கள் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments