Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க அதிபர் ட்ரம்பை மகிழ்வித்த மோடி!



அமெரிக்காவின் 244 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த வாழ்த்துச் செய்தியில் அதிபர் ட்ரம்பிற்கும் அமெரிக்க மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக இந்த நாளில் சுதந்திரத்தையும் மனிதத்தையும் மதித்து கொண்டாடுகிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியின் வாழ்த்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள பதில் செய்தியாக “நன்றி எனது நண்பரே, இந்தியாவை அமெரிக்கா விரும்புகிறது” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்திருந்த நியூஜெர்சி, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, ஜோர்ஜியா உள்ளிட்ட 13 குடியேற்ற பகுதிகள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்து 1770 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி விடுதலை பெற்றன.

இதையடுத்து இந்த மாநிலங்களை உள்ளடக்கி அமெரிக்கா தனி நாடாக உருவெடுத்தது. இதனால் ஆண்டு தோறும் ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments