பிரபல பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று சனிக்கிழமை அவர் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையிலேயே அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில், “நான் கொரோனா பரிசோதனை செய்தேன் .. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் . மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
0 Comments