Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தமிழர்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்! கருணா ஆலோசனை



அண்மையில் ஒருவர் இராவணன் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார், எதிர்காலத்தில் காரைதீவு சந்தியில் உள்ள விபுலானந்தர் சிலைக்கும் தொப்பியைப் போட்டு இவர் எங்களினத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லும் நிலை உருவாகலாம் என்று கருணா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாறில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில்,

கடந்த மாகாணசபைக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 11 உறுப்பினர்கள் வழங்கப்பட்டபோது அதனை ஏழு ஆசனங்கள் வைத்திருந்த முஸ்லிம்களிடம் தூக்கி வழங்கிவிட்டார்கள். அதனை அவர்கள் பயன்படுத்தி அவர்களது பகுதிகளில் தொழில்வாய்ப்புகளையும் அபிவிருத்திகளையும் செய்துவிட்டார்கள்.

இப்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உபதலைவராக இமாம் என்னும் முஸ்லிம் இருக்கின்றார். மறுபுறம் பிள்ளையானின் கட்சியில் உபசெயலாளர் அசாத் மௌலானா இருக்கின்றார். இவர்கள்தான் பிள்ளையானை உள்ளுக்குள் அனுப்பியுள்ளனர்.

கிழக்கு மாகாண வரலாற்றில் இனியொரு முஸ்லிம் முதலமைச்சர் வருவதற்கு நாங்கள் அனுமதிக்கக் கூடாது. சிங்கள சகோதரர்களுடன் இணைந்து நாங்கள் அந்த முதலமைச்சரை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழர்களை கிழக்கில் கூண்டோடு ஒழிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். இவர்கள் தொடர்பாக தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். அண்மையில் ஒருவர் இராவணன் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் காரைதீவு சந்தியில் உள்ள விபுலானந்தர் சிலைக்கும் தொப்பியைப் போட்டு இவர் எங்களினத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லும் நிலையும் உருவாகலாம்.

கண்டி இராச்சியத்தினை வெள்ளைக்காரர்கள் பிடிக்க முடியாது இருந்தபோது அங்கு பொருட்களைக் கொண்டு இறக்கியவர்களே இங்குள்ள முஸ்லிம்களாகும்.

கிழக்கு மாகாணத்தின் இருப்பினை தக்கவைப்பதற்கான வழியை முதலில் பார்க்க வேண்டும். ஹிஸ்புல்லாவின் அரபுக் கல்லூரியினை அரசாங்கம் பொறுப்பேற்றிருக்காவிட்டால் அதனூடாக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

கிழக்கினைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும். கிழக்கில் தமிழர்கள் தங்களது செறிவினை அதிகரிக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளவேண்டும்.

கூட்டமைப்புக்கு என்று வாக்களித்து எதனையும் பெறமுடியாது. தற்போது வீடு இல்லாமல் போய்விட்டது. ரவூப் ஹக்கீம் வீட்டின் முகட்டினை உடைத்துவிட்டு சென்றுவிட்டார்.

அமீர்அலி சுவரினை உடைத்துவிட்டுச் சென்றுவிட்டார். ஹாபீஸ் நசீர் அத்திவாரத்தினையே கிளப்பிச் சென்றுவிட்டார். இனி வீட்டைப்பற்றி யாரும் சிந்திக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments