Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

பிரிட்டனில் கோரம் -தான்பெற்ற மகளையே குத்திக் கொன்ற நெடுங்கேணியைச் சேர்ந்த தாய்




பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் நெடுங்கேணியைச் சேர்ந்த இளவயது தாய்.

இந்த சம்பவத்தில் சயனிகா(வயது04 ) என்ற சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.அதேவேளை தற்கொலைக்கு முயன்ற தாயாரான சுதா என்பவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கணவன் கருணாநிதி சிவானந்தம் (சுகந்தன்) கூறுகையில், மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் தெரிவிக்கையில் இக் கொலை தொடர்பில் வேறு யாரும் தொடர்புபடவில்லை என தெரித்துள்ளனர்.

குழந்தையின் இளஞ் சிவப்பு சைக்கிள் மலர் அஞ்சலிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாய் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனக்கு கான்சர் எனும் மாறாநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

தனது உயிருக்கு ஏதாவது நடந்தால் என் பெண் பிள்ளையை யார் கவனிப்பார்களோ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவேளை நான் இறந்தாலும் என் மகளையும் என்னுடனேயே கூட்டிச்செல்வேன் என உறவினர்களிடம் சொல்லுவாராம்.

இந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments