எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் என்ன செய்ய வேண்டும் என எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தலை விடுத்துள்ளார் முன்னாள் நிதியமைச்சரும் அரசியலில் இருந்து திடீரென வெளியேறுவதாக அறிவித்தவருமான மங்கள சமரவீர.
அதன்படி மதகுருமார்களையும், அடிப்படைவாதிகளையும் இணைத்துக்கொண்டு அரசியலமைப்பைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிடக்கூடாது என்று கூறியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அவற்றை குப்பைக்கூடைக்குள் வீசியெறிவதே இலங்கையர்களின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
0 Comments