Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சொன்னது சொன்னதுதான் தேவார பதிகங்களே சான்று -மீளவும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ள தேரர்



இந்து சமய கோவில்களான திருக்கோணஸ்வரம், நல்லூர் தொடர்பாக நான் எந்தவொரு வரலாற்றையும் திரிபுபடுத்தவில்லை. அவை தொடர்பாக தேவார பதிகங்களே சான்று என மீனவும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார் கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

“திருக்கோணேஸ்வரம், நல்லூர் உள்ளிட்டவை தொடர்பாக நான் கூறிய கருத்துக்களை மீளப்பெறமுடியாது. நான் வரலாற்றினை திரிபுபடுத்தவில்லை. தமிழ் தேவார பதிகங்களில் அதற்கான சான்றுகள் உள்ளன. தற்போது அவற்றை அழித்திருப்பார்களோ தெரியாது. ஆனால் என்னால் தெரிவிக்கப்பட்டவையே வரலாற்று உண்மையாகும்.

அதற்காக கோணேச்சர, நல்லூர் ஆலயங்களை இடித்துவிட்டு மீண்டும் விகாரைகளை கட்டுவதென்று பொருள்பாடாது. இவ்வாறான வரலாற்று தலங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

கிழக்கு மாகாண செயலணி தற்போது மட்டக்களப்பில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. செயலணியின் உறுப்பினர்கள் தொல்பொருள் இடங்களை பர்வையிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் ஜனாதிபதி செயலணி தொடர்பாக யாரும் அச்சமடைய வேண்டியதில்லை. அந்த செயலணி தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் செயற்பாட்டையே முன்னெடுக்கவுள்ளது.

இதில் யாருக்கும் எந்தப்பிரச்சினையும் கிடையாது. தொல்பொருள் செயலணிக்கு பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் என்ற பேதங்கள் இல்லை.

தொல்பொருட்களாக எவையெல்லாம் அடையாளப்படுத்தப்படுகின்றதோ அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் வரலாற்று பணியையே செயலணி மேற்கொள்ளவுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments