Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

பிறப்புச் சான்றிதழில் இலங்கையன் என்று மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது! கடுமையாக எதிர்ப்பேன்- விமல் சூளுரை



பிறப்பத்தாட்சி பத்திரத்தில் இனம் என்ற இடத்தில் இலங்கையன் என்று மாற்ற தான் அங்கம் வகிக்கும் அரசாங்கத்திற்கு இடமளிக்க போவதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் வெளியிடப்படும் பிறப்பத்தாட்சி பத்திரங்களில் இனம் என்ற பகுதியில் இதுவரை குறிப்பிடப்பட்டு வந்த, சிங்களம், தமிழ், முஸ்லிம் என்பதற்கு பதிலாக இலங்கையர் என குறிப்பிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்திருந்தது. எனினும் பதிவாளர் திணைக்களம் அண்மையிலேயே இதற்கான தீர்மானத்தை எடுத்திருந்தது.

இதனை தவிர பிறப்பத்தாட்சி பத்தரத்தில் பெற்றோர் திருமணம் செய்தவர்களா - இல்லையா என்ற பகுதியை நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், பதிவாளர் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தான் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் கீழ் பிறப்பத்தாட்சி பத்திரங்களில் இனம் என்ற பகுதியில் இலங்கையன் என்று குறிப்பிட இடமளிக்க போவதில்லை என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு அமைய பதிவாளர் திணைக்களத்தின் அதிகாரம் பெற்ற உயர் அதிகாரியே பாரிய தவறை செய்துள்ளதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments