Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சீனாவுக்கு மீண்டும் தலையிடி: உண்மையை தேடிச் சென்றது நிபுணர்கள் குழு!



கொரோனாவின் தோற்றம் பற்றிய ஆய்வுகளை நடாத்தவதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் இரு நிபுணர்கள் சீனாவுக்கு விரைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் வெளிப்பட்ட கொரோனா உலகையே நிலைகுலைய வைத்துள்ளது.

இதனால் 120 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஒருமித்த குரலில் கடந்த உலக சுகாதார சபையில் கோரிக்கை வைத்தனர்.

உலக சுகாதார நிறுவனம் இந்த விசாரணையை வழிநடத்தலாமென வேண்டும் என்று சீனாவும் கூறி இருந்தது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் இருவர் சீனாவுக்கு விரைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் விலங்கு சுகாதார நிபுணர். மற்றையவர் தொற்றுநோயியல் நிபுணர்.

இவர்கள் இருவரும் 02 நாட்கள் சீன தலைநகர் பீஜிங்கில் தங்கி இருந்து கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்வதற்கான ஒரு பெரிய பணிக்கான அடித்தளத்தை அமைக்கவுள்ளார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு கடந்த பெப்ரவரி மாதம் சீனா சென்ற வேளை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சீனா சரியான முயற்சிகளை எடுத்ததாக பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.

இதேவேளை சீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் சேர்ந்து இந்த தொற்று பரவலை தவறாக கையாண்டதுடன் சீனாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டது என்று அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த குழுவின் சீனா விஜயமானது உலகளவில் பார்க்கப்படுவதுடன், அடுத்து என்ன நடக்கப்போகின்றது? கொரோனா தொடர்பான உண்மைகள் வெளிவருமா? என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் இருக்கின்றனர்.

Post a Comment

0 Comments