எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு நடத்தப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளமுடியாது உட்பட 18 முக்கிய விதிமுறைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.
வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட திகதி முதல் மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியான 7 நாட்களில் ஊர்வலங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த காலகட்டத்தில் மத அனுசரிப்புகள் அனுமதிக்கப்படும்,எனினும் அவை தேர்தலைக் கருத்தில் கொண்டு நடத்த முடியாது.
வேட்பாளர்களின் ஆதரவாளர்களால் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவதற்கு அதிகபட்சம் 3 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 Comments