கட்டாரில் தந்தை, தாய் மற்றும் மகள் என மூன்று இலங்கையரை கழுத்து அறுத்து கொலை செய்த சக நாட்டவர் இலங்கைக்கு தப்பி வந்துள்ளதாக விமானநிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் முதலாம் திகதி இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட 34 வயது பெண்ணின் நெருங்கிய சகா ஒருவரே இந்த மூன்று கொலைகளையும் செய்துள்ளாகவும் சந்தேக நபர் இலங்கைக்கு தப்பிவந்துள்ளார் எனவும் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொலை செய்யப்பட்ட மூவரினதும் உடல்கள் இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments