Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ட்ரம்பின் வீட்டுக்குள் கொரோனா: ரகசியத்தை பகிரங்கப்படுத்திய ஊடகங்கள்!



அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகனுடைய காதலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நோயாளிகள் பட்டியலில் 28.9 இலட்சம் கொரோனா தொற்றாளர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகனுடைய காதலி கிம்பர்லி கில்ஃபோயிலுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல அமெரிக்கா தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியவரான கிம்பர்லி தற்போது டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருடன் இருந்து வருகிறார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபரின் உரையைக் கேட்பதற்காக தெற்கு டக்கோட்டா பகுதிக்குச் சென்ற அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ட்ரம்ப் பிரச்சார நிதிக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கிம்பர்லி நலமாக உள்ளார்.

பரிசோதனையில் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்குக் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர் கலந்துகொள்வதாக இருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments