Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

நாய் முகத்துடன் பறக்கும் வௌவால்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!



நாய் முகத்துடன் உள்ள வௌவால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டுவிட்டர் வாசிகள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் குறித்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

புகைப்படத்தைப் பார்த்தால் ‘நாயா, வௌவாலா அல்லது இறக்கை முளைத்த நாயா அல்லது நாய் – வௌவாலா’ போன்ற பல குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.

இந்தப் புகைப்படத்தை கைலோ (@emotionaolpedant) என்பவர் தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இதுவரை பல வித்தியாசமான வௌவால் படங்களை பதிவிட்டிருக்கிறோம்.

அந்த வகையில், பட்டிகோஃபர் எபலெட்டெட்(Buettikofer’s epauletted) குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வௌவாலான இது நாய் முகத்துடன் பறந்து கொண்டிருக்கிறது ” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகை வௌவால் இனங்கள் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வசிக்கின்றன.

குறிப்பாக ஐவரி கோஸ்ட், கானா, லிபெரியா, நைஜீரியா, உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன.

Post a Comment

0 Comments