Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

பொலிஸாரின் கட்டளையை மதிக்காமல் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு!


கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அனுராதபுரம் - புத்தளம் வீதியின் ராஜாங்கனை 27 சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாகவது,
நொச்சியாகமவில் இருந்து ராஜாங்கனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸாரின் கட்டளையை மீறி முச்சக்கரவண்டி பயணித்துள்ள நிலைலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், துப்பாக்கிப் பிரயோகத்தையும் மீறி முச்சக்கரவண்டி சென்றுள்ளதை தொடர்ந்து, அதன் கிளை வீதியொன்றில் இருந்து முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் இருந்த நபர்கள் குற்றச் செயலொன்றை புரிவதற்காக அல்லது குற்றமொன்றை புரிந்து தப்பிச் செல்லும் நபர்களா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments