ஸ்ரீலங்காவில் முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.
இது தொடர்பில் உள்நாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புடன் பல நிறுவனங்கள் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் திகன வன்முறை சம்பவம் போன்ற சந்தர்ப்பங்களிலும் பேஸ்புக் நிறுவனம் வன்முறை சார்ந்த தகவல்களை தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments