இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இந்தியாவிடம் காட்டிக்கொடுக்கப்பட்டதாக அண்மையில் சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தற்போது கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறார்.
கடந்த மாதம் 18 ஆம் திகதி மகிந்தானந்த கூறிய இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்திய விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினர், விசாரணைகளின் பின்னர், அப்படி எதுவும் நடக்கவில்லை எனக் கூறியுள்ளதை அடுத்து அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச, எவ்வித புரிதலோ, அடிப்படையோ இன்றி, குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்தன போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments