வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2069 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடகஸ்கரில் இருந்து வருகை தந்த 2 பேருக்கும் மாலைத்தீவில் இருந்து வருகை தந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 36 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரை 1863 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் 29 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 877 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை 2069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments