Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களின் விசாரணைக்கு தென்னிலங்கையில் எழுந்தது எதிர்ப்பு!



புகழை ஈட்டிக்கொடுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களை விசாரணைகளுக்கு அழைத்து வாக்குமூலம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான அவர் நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

குமார் சங்ககாரவிடம் வாக்குமூலம் பெற்றமை குறித்து நான் எனது எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டுக்கு புகழை தேடிக்கொடுத்த விளையாட்டு வீரர்களை அழைத்து விசாரணை நடத்துகின்றனர். ஆனால் குற்றம் சுமத்தியவரை விசாரணைக்கு அழைக்காது வாக்குமூலம் பெற அவரது வீட்டுக்கு செல்கின்றனர்.

இவற்றை முன்னுக்கு பின் முரணான செயல்களாகவே நான் காண்கின்றேன். இது கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிரான கடுமையான தாக்குதல்.

இவை சரியான செயல்கள் அல்ல என நாமல் ராஜபக்ஷ கூறுகிறார். அப்படியானால், பிரதமர் பேசி இவற்றை நிறுத்த வேண்டும்.

கிரிக்கெட் விளையாட்டை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க நேரடியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்களுக்கு இப்படி தொந்தரவுகளை கொடுத்தால் அவர்கள் மேலும் பலவீனமடைவார்கள்.

09 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தேர்தல் நேரத்தில் இவற்றை ஏன் முன்வைக்க வேண்டும். இவற்றுக்கு சரியான விசாரணைகளை நடத்தி சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments