இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குசல் மென்டிஸின் ஜீப் வண்டியில் மோதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹொரேதுடுவ பகுதியில் ஜீப் வண்டியும் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது பாணந்துறை – கொரகபொல பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
0 Comments