ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ், முகத்துவாரம் பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நேற்று இரவு 8.30மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியில் வசிக்கும் 25 வயதான யுவதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணிடம் இருந்து 322 கிராம் 910 மில்லி கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், போதை பொருள் வியாபாரத்தின் ஊடாக சம்பாதித்தாக கருதப்படும் 50 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments