Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவுக்கு கிடைத்த நிதி எங்கே அரசிடம் ரணில் கேள்வி?



அரசாங்கத்திடம் தற்போது கேட்ட வேண்டியது கொரோனா பற்றி அல்ல எனவும் நிதியுதவிகளுக்கு என்ன நடந்தது என்றே கேட்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற அந்த கட்சியின் தொடர்பாடல் செயலணியின் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எனக்கு தெரிந்த வரையில் கொரோனா நிதியுதவியாக 200 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. எனது கணக்கு பிழை என்றால், அதனை திருத்துமாறும் கிடைத்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை தெளிவுப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்குள் இரண்டாவது அலை ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். எனினும் இது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எந்த வகையிலும் திருப்தியடைய முடியாது.

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் ஆபத்து காரணமாக பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நிதி இல்லை எனக் கூறி காலத்தை கடத்த வேண்டாம்.

உலக சுகாதார அமைப்பின் அறிவிப்புக்கு பின்னர், இலங்கைக்கு 230 மில்லியன் டொலர்கள் கிடைத்ததாக நான் கூறினேன். எனினும் உலக சுகாதார அமைப்பு 19 மில்லியன் டொலர்களை வழங்கியதாக சுகாதார அமைச்சர் கூறியிருந்தார்.

உண்மையில் உலக சுகாதார அமைப்பிடம் நிதியில்லை. அமெரிக்க உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்திய பின்னர், அந்த நிதியை உலக வங்கியும், ஐரோப்பிய ஒன்றியம் மாத்திரமல்லாது சில நாடுகளிடம் இருந்து கிடைத்தன எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments