Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தமிழர் பாரம்பரியங்கள் பிக்குகளால் அபகரிப்பு! சுமணரத்ன தேரருக்கு பதிலடி கொடுத்து அனுப்பிய மக்கள்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தின் சில இடங்களை தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதனை எதிர்த்து அப்பிரதேச மக்கள் நேற்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணிக்குரியவர்கள் என குறிப்பிடப்பட்டு பௌத்த மதகுருமார் மற்றும் இராணுவத்தினர் சனிக்கிழமை (04.07.2020) வேத்துசேனை கிராமத்தில் உள்ள புளியடி வைரவர் ஆலயம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களை பார்வையிட்டு சென்றதனையடுத்து அப்பிரதேச கிராமவாசிகள் இதனால் குழப்பநிலையினை அடைந்திருந்தனர்.

முழுமையாக தமிழ் மக்கள் வாழும் குறித்த கிராமத்தில் பௌத்த ஆலயம் அமைக்கப்படலாம் என சந்தேகம் வெளியிட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு தமது பூர்வீக காணியினை தொல்பொருள் இடமாக கருதவோ தமது நிலத்தினை அபகரிக்கவோ அனுமதிக்க மாட்டோம் என தமது பலமான எதிர்ப்பை காட்டும் முகமாக எதிர்ப்பு நடவடிக்கையினை நேற்றைய தினம் முன்னெடுக்க முற்பட்ட வேளையில் பொலிசார் மற்றும் பொதுமக்களிடையே பயங்கரமான முறுகல் நிலைமை ஏற்பட்டது.

குறித்த காணியானது தனியாருக்கு சொந்தமாக உள்ள நிலையில் காணியின் ஒரு பகுதி விளையாட்டு மைதானமாகவும் மற்றையை பகுதி வேத்துச்சேனை புளியடி வைரவர் ஆலயத்திற்காகவும் நீண்டகாலமாக பயன்படுத்தி வருதாகவும் அதனை தொல்பொருள் பகுதியாக அடையாளப்படுத்த வேண்டாமென பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

சம்பவ இடத்திற்கு இலங்கை மக்கள் முன்னேற்ற கட்சியின் தவிசாளரும் வேட்பாளருமான அருண் தம்பிமுத்து வருகை தந்ததுடன் இவ்விடயம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்ககையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்ததுடன் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் நா.விஸ்ணுகாந்தன் ஆகியோர் அவ் இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த எஸ்.வியாழேந்திரன்,

தொல்பொருட்களை அடையாளம் காணும் செயற்பாடு கடந்த நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியதுடன் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டார்.

அதேவேளை சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்திருந்த நிலையில் அனைவரையும் வெளியேறுமாறு குறிப்பிட்டதனை தொடர்ந்து எஸ்.வியாழேந்திரன் இடங்களை பார்வையிட்டு அவ் இடத்திலிருந்து செல்ல முற்பட்ட வேளையில் அவ் விடத்துக்கு விரைந்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் இரா.சாணக்கியன் இது மக்களுடைய நிலம் இதனை யாரும் இந்த மக்களிடமிருந்து பறிக்க முடியாது இதற்காக நாம் குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.

இது தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு இதற்கு துணையாக செயற்படுகின்ற எவரையும் இங்கு அனுமதிக்க முடியாது என காரசாரமா பொலிசாரிடம் மக்கள் சார்பாக எதிர்ப்பினை தெரிவித்துடன் மக்களை அவர்களுடைய சொந்த மண்ணிலிருந்து அகற்றுவதனை தடுத்து நிறுத்தியதுடன் ஆளும் தரப்பினரே இத் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணும் செயற்பாட்டை செய்து கொண்டு பின்னர் அவர்களே இதனை எதிர்க்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு எம் மக்களை ஏமாற்றுகின்ற, செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.

இதன் போது பொது மக்களுக்கும் எஸ்.வியாழேந்திரன் ஆதரவாளர்களுக்குமிடையே சிறு முறுகல் நிலை ஏற்றபட்டதுடன் பொலிசார் தலையிட்டு அதனை நிறுத்தியதுடன் அவ்விடத்திலிருந்து வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.

தொடர்ந்து மக்களிடம் பேசிய இரா.சாணக்கியன் இந்த மக்களையும் வேத்துசேனை பிரதேசத்தினையும் தான் நன்கு அறிந்தவன் என்ற ரீதியில் இவ்வாறான செயற்பாடகளுக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது என தெரிவித்ததுடன் இது தொடர்பிலான சட்ட ரீதியான சகல நடவடிக்கைகளுக்கும் தான் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி வழங்கினார்.

பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஆலயத்தினை துப்பரவு செய்து பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை அதன் பின்னர் மேற்கொண்ட வேளையில் அவ்விடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியும் சுயேட்சைக்குழு வேட்பாளருமாகிய அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மக்களுடன் இவ் விடயம் தொடர்பில் பேசிய போது இந்த பிரச்சனைகள் தொடர்பில் பார்ப்பதற்கு உங்களுடைய ஆட்கள் எவரும் இல்லை என கருத்து தெரிவித்து தொடர்த்து பேச முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் அவ்விடத்திலிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து வேத்துசேனை புளியடி வைரவர் ஆலயத்தில் மக்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் சக வேட்பாளர்கள் வருகை தந்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் வருகை தந்து இந்த பிரச்சனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

இப் பிரதேச மக்கள் தனியாருக்கு சொந்தமான காணி என குறிப்பிடும் வேளையில் இதனை பிரதேச மக்கள் எல்லைப்படுத்துவதனை தடை செய்யும் முகமாகவும் இது தொல்பொருள் திணைக்களத்துக்குரியது எனவும் குறித்த இடத்திற்கு போக முடியாதவாறு நீதிமன்ற தடையுத்தரவினை பொலிசாரினால் இரா.சாணக்கியன் மற்றும் அப்பிரதேச கிராம தலைவர்கள் மற்றும் பிரதேச அமைப்புக்களுக்கு இன்று காலை வழங்கியுள்ளனர். இது தொடர்பில் சட்ட ரீதியான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வேத்துசேனை கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தினை அப் பிரதேச மக்கள் இளைஞர்கள் நிதி திரட்டி மைதானத்துக்காக வாங்கி தற்போது அதில் அரச நிதியில் அரங்கு ஒன்றினையும் கட்டி பயன்படுத்தி வருவதுடன் புளியடி வைரவர் ஆலயத்தில் பல வருடகாலமாக வழிபாட்டில் ஈடுபட்டு வரும் அப்பிரதேச மக்கள் அதனை யாருக்கும் விட்டக் கொடக்க முடியாது என தெரிவிப்பதுடன் இது தொடர்பில் தாம் ஓயாது போராடுவோம் எனத் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments