Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கோட்டாபய தொடர்பில் மக்களின் தவறான புரிதல்! சுட்டிக்காட்டுகிறது ஜே.வி.பி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தியதாக கிராமத்தில் இருப்பவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தியமைக்கான பெருமை மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் மற்றும் பொலிஸார் உட்பட படையினரையே சாரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊருகஸ்மங்சந்திய பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அவர்களின் அர்ப்பணிப்பை பெருமையுடன் ஏற்றுக்கொண்டு மக்கள் தனிமைப்படுத்திக் கொண்டதால், நாட்டின் அதிஷ்டம் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறு காரணமாகவே கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினர்.
கண்ணுக்கு புலப்படாத வைரசுடன் படையினருக்கு போரிட முடியாது. துப்பாக்கியால், வைரசை சுட்டு வீழ்த்த முடியாது. சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரமே வைரசை கட்டுப்படுத்த தெரியும். எனினும் ஜனாதிபதி படையினரை கொரோனா ஒழிப்புக்கு பயன்படுத்தி அவர்களை நோயாளிகளாக மாற்றினார்.
இப்படி எந்த பொறுப்பும் இல்லாத அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினால் நடப்பவற்றை எண்ணிப்பார்க்க முடியாது. இந்த தவறுகளை தெரிந்தும் அரசாங்கத்திற்கு வாக்களித்தால், மக்ளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எவரும் இருக்க மாட்டார்கள் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments