Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அதிரடிப்படையின் திடீர் சுற்றிவளைப்பு! கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய அறை





ஹோமாகம பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து முன்னெடுத்துள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது குறித்த வெடிபொருடகள் நேற்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பிட்டிபன பகுதியில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது இரகசிய அறை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் உட்பட வெடி பொருட்களும் குண்டு துளைக்காத ஆடைகள் இரண்டும், கைக்குண்டுகள் 4 , 2 டெட்டனேட்டர்கள் ,600 வெடிமருந்துகள் உட்பட் மேலும் சில வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments