13வது திருத்தம் காரணமாக மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ள உதயகம்மன்பில, இதன்காரணமாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் வெடிக்கும் என தெரிவித்துள்ளார்.
13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு ஒன்பது பகுதிகளாக பிரிபட்டுவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விமல்வீரவன்ச, அரசாங்கம் இவை அனைத்தையும் கருத்திலெடுத்து புதிய அரசமைப்பை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.
0 Comments