Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் பௌத்த தேரரால் வெடித்துள்ள புதிய சர்ச்சை!



திருகோணமலையில் அமைந்துள்ள பாடல்பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம்.

ஆனால், அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்படவேண்டும். இதனைச் செய்தாலே போதும்."

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவ மேதானந்த தேரர் தெரிவித்தார்.

இராவணன் என்ற மன்னன் இலங்கையை ஆண்டான் என்பது வெறும் கட்டுக்கதை என்று சில தினங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த எல்லாவ மேதானந்த தேரர், தற்போது இந்துக்களின் புனித தலமான கோணேஸ்வரம், கோகண்ண விகாரை என்று புதுக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

Post a Comment

0 Comments