Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவிற்கு மாம்பழங்கள் வழங்கிய உதயன் ஆசிரியர்




ஸ்ரீலங்காவின் பிரதமருக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மாம்பழம் கொண்டு சென்று கொடுத்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இன்றையதினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில், யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரிய பீட தலைமை ஆசிரியரான த.பிரபாகரன் பிரதமருக்கு மாம்பழங்களை கொண்டு சென்று கொடுத்தமை பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் பேசப்பட்டிருந்ததாக ஊடகங்களில் வெளிவந்தாலும் கடந்த கால தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைகள், முறையான விசாரணைகள், அவர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பில் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சிங்கள ஊடகவியலாளர்களை விட ஒப்பீட்டளவில் தமிழ் ஊடகவியலாளர்கள் அதிகம் கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.அதிலும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.

நிமலராஜன், தராக்கி சிவராம், நடேசன், சுகிர்தராஜன், உதயன் பத்திரிகை ஊழியர்கள் இருவர் என்று கொல்லப்பட்ட தமிழர்களின் பட்டியல் நீளமானது.

மேலும் பலர் கடத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள், உயிரைக் காத்துக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குத் தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவருக்குக்கூட எந்த ஆட்சியிலும் நீதி கிடைக்கவில்லை.

2001 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரையில் வடக்கில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை நிறுவனமும் அதன் ஆசிரியர்கள், பணியாளர்களும் 30 தாக்குதல்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த இழப்பீட்டுக்கான மதிப்பீடுகள் கூட கேலிக்குரியவையாகவே இருந்தது.

கடந்து வந்த மஹிந்த ஆட்சிக் காலம் வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு ஒரு கொலைக் களமாகவே இருந்தது.

இவ்வாறான ஒரு சூழலில் இன்றைய தினம் இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் இத்தகைய விடயங்களும் பேசுபொருளாக பேசப்படுமென பலரும் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments