ஸ்ரீலங்காவிற்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலையம், பேருந்து, புகையிரதம் சேவைகள், பாடசாலை மற்றும் தேர்தல் நடைபெறும் காலம் என்பன இந்த ஆபத்தான இடங்களாக இருக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும் போது, பலர் சமூக இடைவெளி குறித்து எவ்வித கவனத்தை செலுத்துவதில்லை என்பதால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்கள், பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும் மக்கள் முக கவசனங்களை அணி வேண்டும் என்பதுடன் சமூக இடைவெளியை பேண வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
0 Comments